தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளி சுங்கச்சாவடியில் பாலக்கோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓசூரிலிருந்து தர்மபுரி நோக்கி வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, காரில் இருந்த 8 மூட்டைகளில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 81 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சொகுசு கார் மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் குடமலனி பகுதியை சேர்ந்த அசோக்குமார் (28) என்பதும், பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அசோக்குமாரை கைது செய்த போலீசார், அவரை தர்மபுரி சிறையில் அடைத்தனர்.