திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை முயற்சி, தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மூலச்சி, வடக்கு தெருவைச் சேர்ந்த குருநாதன் மகன் மாடசாமி(எ) மகேஷ் (வயது 36), குருநாதன் மகன் மணிகண்டன்(32), குருநாதன் மகன் கிருஷ்ணன்(எ) கிட்டு(29) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மேற்சொன்ன 3 பேரும் கொலை முயற்சி,தொடர் தாக்குதல், சொத்துச் சேதம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் மேற்சொன்ன 3 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்படி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், மேற்சொன்ன 3 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த ஆண்டு இதுவரை 81 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.