சென்னை,
தூத்துக்குடியில் மாயமான 8-ம் வகுப்பு மாணவனை 4 நாட்களாகியும் கண்டுபிடிக்காததற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-
தூத்துக்குடியில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த 8-ஆம் வகுப்பு மாணவன் காணாமல் போய் நான்கு நாட்களாகியும் மாணவனை இதுவரை காவல்துறை கண்டுபிடிக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சிறுவர்கள் காணாமல் போவது சர்வ சாதாரணமாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே செஞ்சி சிறுமி காணாமல் போய் 20 நாட்களுக்கு மேலாகியும் கண்டுப்பிடிக்காத காவல்துறை, தூத்துக்குடி மாணவன் காணாமல் போன விவகாரத்திலும் மெத்தனமாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்பட்டு மாணவனை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.