சென்னை,
சென்னையில் 9 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து கமிஷனர் அருண் நேற்றிரவு உத்தரவிட்டார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா, தரமணி சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், நீலகண்டன், மெரினா சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
யமுனா, கொளத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். பார்த்தசாரதி அடையாறுக்கும், அன்புமணி முத்தயால்பேட்டைக்கும், சபரிதாசன் திருவான்மியூருக்கும் சட்டம் -ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.
பேமீலா சர்ட்லி, சூரிய லிங்கம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மோகன் உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.
இதே போன்று நேற்றிரவு தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவில் பணியாற் றும் 42 இன்ஸ்பெக்டர்கள் உதவி கமாண்டர்களாக பதவி உயர்வு பெற்ற னர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ளார். பதவி உயர்வு பெற்ற இவர்க ளுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. பணி நியமனம் பின்னர் வழங் கப்படும் என்று டி.ஜி.பி. அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலை ஒட்டி, ஒரே போலீஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.