திருச்சி புத்தூர் மேல வண்ணாரப்பேட்டை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 28). இவர் சம்பவத்தன்று தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வேலூரில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தவுடன் தனது 9 பவுன் தங்க நெக்லசை கழற்றி தனது கைப்பையில் வைத்துள்ளார். பின்னர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டைக்கு தனியார் பஸ்சில் ஏறினார். அதன் பின் அவர் வண்ணாரப்பேட்டை மதுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் தனது கைப்பையை திறந்து பார்த்தபோது. கைப்பையில் வைத்திருந்த 9 பவுன் தங்க நெக்லஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஓடும் பஸ்சில் அதனை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.