தமிழக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது

மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

ராமேசுவரம்,

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்.

இலங்கை கடற்படை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை

மேலும் ஒரு விசைப்படகில் மீன்பிடித்த ராமேசுவரத்தை சேர்ந்த எடிசன் (வயது 29), மத்தியா (22), ஜான்ஜெய்சன் (25), ஸ்டிவன்சன் (23), சுபார்டன் (25), அபிஷ்டன் (27), மோபிஸ் (21). அந்தோணி பிரதீப் (26), அந்தோணி (42) ஆகிய 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT