திருச்சி,
மதுரை கோட்டத்தில் தண்டவாளத்தில் பொறியியல் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் 9 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு;
*வருகிற 27-ந்தேதி முதல் வருகிற 2-ந்தேதி வரை செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16848) மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக அந்த ரெயில் செல்லாது.
* நாகர்கோவில்-மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (எண்:16352) வருகிற 28-ந்தேதி மற்றும் 31-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து மும்பை செல்லும். அந்த நாட்களில் திண்டுக்கல் வழியாக செல்லாது.
* கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்:12666) வருகிற 30-ந்தேதி மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
* குருவாயூரில் இருந்து வருகிற 27-ந்தேதி முதல் வருகிற 2-ந்தேதி வரை இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பி ரஸ் (எண்:16128) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப் பாறை வழியாக செல்லாது.
* கன்னியாகுமரியில் இருந்து வருகிற 29-ந்தேதி காலை 5.15 மணிக்கு ஐத ராபாத் புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:17070) மதுரையில் இருந்து மானா மதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல் லாது.
* எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 3-ந்தேதி நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும் வேளாங்கண்ணி வாராந்திர ரெயில் (எண்:16363) விரு துநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது.
* தூத்துக்குடியில் இருந்து வருகிற 27-ந்தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் (எண்:17616) விருதுநகரில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது.
* மதுரையில் இருந்து வருகிற 28-ந்தேதி பகல் 12.05 மணிக்கு புறப்படும் பிகானீர் அனுவ்ராத் அதிவிரைவு ரெயில் (எண்:22631) மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.
* நாகர்கோவிலில் இருந்து வருகிற 30-ந்தேதி காலை 9.25 மணிக்கு புறப் படும் கச்சிக்குடா வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்:16354) திண்டுக்கல்லில் இருந்து கரூர் சென்றடையும். அன்று திருச்சி வழியாக செல்லாது.
இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.