தமிழக செய்திகள்

ஜூன் மாதத்தில் 96.75 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்

24.06.2026 அன்று 3,77,208 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில்பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 96,75,993 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3,77,208 பயணிகள்

அதிகபட்சமாக 24.06.2026 அன்று 3,77,208 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 2026, ஜூன் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை)பயன்படுத்தி 48,83,485 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி(Single Journey Paper QR 19,28,372; Online QR – 1,27,795; Static QR 2,03,398; Whatsapp - 4,29,255; Paytm 2,90,492; ONDC – 12,13,854; PhonePe – 2,63,433; CMRL Mobile App(SVP) 80,224; Chennai One App – 2,46,608; Vijay Antony Music Concert Event QR – 9,077) பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

20% கட்டண தள்ளுபடி

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, வாட்ஸ் அப் - (+91 83000 86000), பேடிஎம், போன் பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்றபயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டண தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் வாங்கப்படும் ஒற்றைப்பயணத்துக்கான காகித க்யுஆர் பயணச்சீட்டுகளுக்கு இந்த தள்ளுபடிகிடையாது.

நன்றி

மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்புநல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.