தமிழக செய்திகள்

991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்பு: நெல்லையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் பைக் திருட்டு, கன்னக்களவு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகளை நெல்லை மாநகர போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி,

991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்ட போலீசார் நெல்லையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்தனர்.

991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்பு

கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் பைக் திருட்டு, கன்னக்களவு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்டனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

திருநெல்வேலி மாநகரம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர்ந்து 15 பைக்குகள் திருட்டு, 4 கன்னக்களவு, ஒரு செயின் பறிப்பு மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடித்து ரீல்ஸ் இஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட திருநெல்வேலி டவுண், வயல் தெரு பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன் (வயது 22) சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.

அந்த நபர் திருநெல்வேலி மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளது. ஐயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

SCROLL FOR NEXT