தமிழக செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சாவு

ஊத்துக்கோட்டை அருகே வெந்நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகரை சேர்ந்தவர் ராஜாக் (வயது 30). இவரது மனைவி ஜெரினா (25), மகள்கள் நபிசா (5), நஸ்ரின் (3), மகன் அஜ்மீர் (2).

நேற்று காலை ரஜியா தன்னுடைய மகனை குளிப்பாட்ட வெந்நீர் வைத்தார். வெந்நீர் பாத்திரத்தை குளியல் அறையில் வைத்து விட்டு சோப்பு எடுக்க சென்றார்.

அதற்குள் விளையாடி கொண்டிருந்த அஜ்மீர் வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டான். உடனடியாக அஜ்மீரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜ்மீர் பரிதாபமாக உயிரிழந்தான்.. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT