தமிழக செய்திகள்

பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் தனிநபர் நிலத்திற்கு 2-ம் வகுப்பு மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் பன்றியை பிடிக்க புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து 2-ம் வகுப்பு மாணவி படுகாயம் அடைந்தார்.

2-ம் வகுப்பு மாணவி

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (வயது 34) மகள் நிஷாந்தனா(7). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கண்ணிவெடி வெடித்து மாணவி படுகாயம்

இந்த நிலையில் ஜா.ஏந்தல் கிராமத்தையொட்டி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் தனிநபர் நிலத்திற்கு நேற்று முன்தினம் மாலை நிஷாந்தனா இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பன்றிகளை பிடிக்க புதைத்து வைத்திருந்த கன்னிவெடியை நிஷாந்தனா மிதித்துள்ளார். இதில் அந்த வெடி வெடித்து சிதறியது. இதில் நிஷாந்தனாவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் வலியால் அலறி துடித்தாள்.

போலீசார் விசாரணை

இந்த சத்தம் கேட்டதும் ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவளை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நிஷாந்தனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT