தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT