நெல்லை,
அனைத்து ஜீவராசிகளுக்கும் உலகில் பிறந்தவுடன் முதல் உணவாவது தாய்பால். ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும். தாய்பால் கொடுக்கும் தாய்க்கும், அதை பருகும் குழந்தைக்குமான பந்தத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.
அந்த வகையில், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தனம் (வயது 58). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் பசு மாடு சமீபத்தில் கன்று ஈன்றது. அதேபோன்று ஆடு ஒன்றும் இரு குட்டிகளை ஈன்றது.
இந்த நிலையில் ஆடு அவ்வப்போது தனது குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. அப்போது அங்குள்ள பசு மாட்டிடம் சென்று 2 ஆட்டுக் குட்டிகளும் பால் குடிக்கிறது. பொதுவாக பசு மாடு தனது கன்றுக்கு மட்டுமே பால் புகட்டுவது வழக்கம். இந்த நிலையில் ஆட்டுக்குட்டிகளுக்கு பசு மாடு பால் கொடுப் பதை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.