தமிழக செய்திகள்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த சுடுமண் கிண்ணம்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் கிண்ணம் கிடைத்துள்ளது. அழகிய வேலைபாடுகளுடன் சேதமடையாமல் முழுமையாக ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்த கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விஜயகரிசல்குளம் அகழாய்வில் இதுவரை 2,810 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 11 அகழாய்வு குழிகளில் 4 குழிகள் முழுமையாக 15 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளன. 7 குழிகளில் தொடர்ந்து மண்பானைகள், மண்சட்டிகள் உள்பட பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருவதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT