தமிழக செய்திகள்

பள்ளிப்பட்டு பஜாரில் மளிகை கடைக்காரர் மோட்டார் சைக்கிள் திருட்டு

பள்ளிப்பட்டு பஜாரில் மளிகை கடைக்காரர் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பஜார் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் செட்டி (வயது 57). இவர் பஜார் தெருவில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு முன்பு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT