கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

வானில் தோன்றும் பிரமாண்ட ‘சூப்பர் மூன்’ - பொதுமக்கள் நாளை பார்த்து ரசிக்கலாம்

பீவர் சூப்பர் மூன்-ஐ தொடர்ந்து அடுத்தடுத்து 4 சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

சென்னை,

நவம்பர் மாதத்தில் வரும் முழு நிலவு பாரம்பரியமாக 'பிரமாண்ட சூப்பர் மூன்' என்று அழைக்கப்படுகிறது.

அரிய வானியல் நிகழ்வு

வானில் நாளை (செவ்வாய்க்கிழமை) 'பீவர் சூப்பர் மூன்' எனப்படும் பிரமாண்ட முழு நிலவு தோன்றவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு இந்திய நேரப்படி அன்று இரவு 8.23 மணிக்கு நிலவு தனது முழுமையான ஒளியை அடையும். சூரியன் மறைவுக்குப் பிறகு கிழக்கு வானில் நிலவு உதிக்கும்போதே இதனை மிகத் தெளிவாகப் பார்க்க முடியும்.

நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் (சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்து 765 கி.மீ தொலைவில்) வருவதால், வழக்கமான முழு நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

பிரமாண்ட சூப்பர் மூன்

இதன்படி நவம்பர் மாதத்தில் வரும் முழு நிலவு பாரம்பரியமாக 'பிரமாண்ட சூப்பர் மூன்' என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலத்திற்கு முன்பாக நீர்நாய்கள் தங்களின் இருப்பிடங்களை தயார்படுத்தும் காலம் என்பதால் இப்பெயர் வந்தது. அடுத்தடுத்து வரவிருக்கும் சூப்பர் மூன் வரிசையில் இது முதல் நிகழ்வாகும். இதனை பார்ப்பதற்கு தொலைநோக்கி எதுவும் தேவையில்லை. வானம் மேகமூட்டமின்றி தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம்.

4 சூப்பர் மூன்கள்

இதனைக் காண மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதைத்தொடர்ந்து வருகிற டிசம்பர் 23-ந் தேதியும், அடுத்து ஜன.22-ந் தேதியும், பிப்.20-ந் தேதியும் அடுத்தடுத்து சூப்பர் மூன் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT