நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வேல்முருகன் என்ற நபர், தன்னை சி.பி.ஐ. இயக்குநர் என்று கூறிக் கொண்டு உள்ளே நுழைய முயன்றார். காவல்துறை பெல்ட் மற்றும் ஷுவையும் அவர் அணிந்திருந்தார். அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சி.பி.ஐ. இயக்குநர், குற்றப்புலனாய்வு அதிகாரி, ஊழல் தடுப்பு அதிகாரி என்பன உள்ளிட்ட பல்வேறு போலி அடையாள அட்டைகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பத்தையும் அவர் வைத்திருந்தார். இதையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் அந்த நபரை விசாரணைக்காக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.