ஐதராபாத்,
பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் சவுகான் (வயது 50). இவர் தனது மனைவி, மகளுடன் நேற்று முன்தினம் மதியம் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்க ரெயிலில் புறப்பட்டார். சுரேஷ்குமார் சவுகானுக்கு தாகமாக இருந்ததால் தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக குப்பம் ரெயில் நிலையத்தில் இறங்கினார்.
அவர் தண்ணீர் பாட்டிலை வாங்கி வருவதற் குள் ரெயில் மெல்ல நகர்ந்தது. ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது, சுரேஷ் குமார் சவுகான் தவறி தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது அவர் ரெயில் சக்கரங்களில் சிக்கி பலியானார். இதுகுறித்து குப்பம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.