தமிழக செய்திகள்

மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த மேஸ்திரி

ஆம்பூர் அருகே கட்டிட மேஸ்திரி மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே கட்டிட மேஸ்திரி மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

ஆலங்காயம் ஒன்றியம், துரிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்திவேல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி உஷா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் சக்திவேல் நேற்று நாயக்கனேரி ஊராட்சி காமனூர்தட்டு பகுதியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சக்திவேல் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.