கோயம்புத்தூர்,
தோட்டத்தில் புகுந்து 5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே நரிக்கல்பதி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கோழிக்கூட்டில் இன்று ராட்சத மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. பின்னர், கூட்டில் இருந்த 5 கோழிகளை அடுத்தடுத்து விழுங்கியது. இதையடுத்து, அங்கிருந்து செல்ல முயற்சி செய்தது. ஆனால், கோழிகளை விழுங்கியதால் மலைப்பாம்பால் அங்கிருந்து நகர்ந்து செல்ல முடியவில்லை.
இதனை, அந்த வழியே சென்ற அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அங்கு நகர முடியாமல் இருந்த மலைபாம்பை மீட்டனர். மீட்ட மலைப்பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். ராட்சத மலைப்பாம்பு தோட்டத்தில் புகுந்து 5 கோழிகளை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.