தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும் - ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் பிறப்பால் இனி யாரும் முதல்-அமைச்சராக முடியாது என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்-அமைச்சராக முடியாது!

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.