தமிழக செய்திகள்

புதிய தலைமை செயலகம் அவசியம்; ஆனால் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது தவறானது - அன்புமணி ராமதாஸ்

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளகம் கட்டுவது மிக தவறான முடிவு என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“தமிழக அரசு புதிதாக பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அவசியமானது. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையும் இதுதான்.

ஆனால் அதே சமயம், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வளகம் கட்டுவது என்பது மிக தவறான ஒரு முடிவு. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கிய காரணம் அந்த பகுதி குறுகிய பகுதி. போக்குவருத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது.

அந்த பகுதியில் பல கல்வி நிலையங்கள், பல கல்லூரிகள், சாந்தோம் தேவாலயம், பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் ஆகியவை இருக்கின்றன. மேலும் அங்கு குறுகிய சாலைகள்தான் உள்ளன. நாளை அங்கே தலைமை செயலகம், சட்டமன்ற வலாகம் வந்தால் லட்சக்கணக்கான மக்கள் அங்கே செல்வார்கள். அப்போது அங்கே செல்வதற்கு இடம் இருக்காது. போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT