சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”பட்டினப்பாக்கம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதி, பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் நிறைந்த பகுதி. வருங்காலங்களில் புதிய தலைமை செயலகத்தை விரிவாக்கம் செய்ய முடியாது. வீடு பக்கத்தில் உள்ளது என்பதற்காக முதல்-அமைச்சர் அங்கு தலைமை செயலகம் கட்டுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் கூட மறைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது போல சித்தரிக்கிறார்கள். மக்கள் மாற்றம் வேண்டுமென தவறாக அவர்களை தேர்வுசெய்துவிட்டார்கள். தவெக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். தவெக ஆட்சி தமிழ்நாட்டின் இருண்டகாலம்.
தேர்தலில் வென்றவர்கள் துரோகம் செய்துவிட்டு தவெகவுக்கு சென்றுவிட்டனர். கட்சிக்கும், மக்களுக்கும் துரோகம் செய்ததால்தான் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அமமுக ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் அதிமுக வெல்ல போராடுவோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.