தமிழக செய்திகள்

பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை... கமல்ஹாசன் பரபரப்பு பதிவு

சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?, நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது. இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான். அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்.

சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.