தமிழக செய்திகள்

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 5-வது பிளாக்கில் உள்ள மின்சார பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

எண்ணூர்,

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மின்சார பெட்டியில் திடீர் தீ விபத்து

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 5-வது பிளாக்கில் நேற்று அதிகாலை 5 மணியளவில் மின்சார பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளர்கள், குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பத்திரமாக மீட்பு

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீ மற்றும் கரும்புகையை கண்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிலர் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT