தமிழக செய்திகள்

’தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

இந்தியா வல்லரசு நாடாவதை என்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் கோவில் வளாகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழர் ஒருவர் பிரதமர் ஆக வாய்ப்பிருக்கிறதா? என்றும், பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது;

தமிழர் பிரதமர் ஆகலாம்

”தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமர் ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம். ஒருநாள் தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார். பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் விஜய் இருவரின் ஆட்சி குறித்து நான் கருத்து கூற முடியாது. அதற்கு பல அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இந்தியா வல்லரசு நாடாவதை என்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மதுரை மீனாட்சி அம்மன் ஆசியால் நல்லது நடக்கும். எல்லோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT