தமிழக செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

பட்டுக்கோட்டை அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வாலிபரின் தந்தை உள்பட 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

தஞ்சாவூர்;

பட்டுக்கோட்டை அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வாலிபரின் தந்தை உள்பட 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சொர்ணாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). இவருடைய மகன் ரஞ்சித்(27). இவருடைய நண்பர் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா வேம்பனூரை சேர்ந்தவர் கருப்பையா மகன் சுந்தரபாண்டி(வயது 34). இவர் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.ரஞ்சித்துக்கு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அப்போது 9-ம் வகுப்பு படித்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரஞ்சித் அந்த சிறுமியை வெளியூருக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதற்கு ரஞ்சித்தின் தந்தை செல்வம் மற்றும் சுந்தரபாண்டி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர். திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரஞ்சித், சுந்தரபாண்டி, செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

3 பேருக்கு சிறை தண்டனை

இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரஞ்சித்துக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சுந்தரபாண்டி, செல்வம் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்