தமிழக செய்திகள்

பெண் டாக்டர் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்து விபத்து - சென்னை தி.நகரில் பரபரப்பு

தி.நகர் மேம்பாலத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்ட்டர் மீடியனில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் டாக்டரான சேஷா திவ்ய கிருஷ்ணா, இன்று காலை தனது காரில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் தி.நகர் மேம்பாலகத்தில் காரை ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக காரின் டயர் திடீரென வெடித்தது.

இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த சென்ட்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்துப் பிரிவு போலீசார் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.