தமிழக செய்திகள்

பாதுகாப்பை மீறி..முதல்-அமைச்சரின் வாகன அணியில் புகுந்த தொண்டரால் பரபரப்பு

கரூர் செல்லும் வழியில் ஆங்காங்கே தவெகவினரும், மக்களும் கூடி முதல்-அமைச்சர் விஜய்யின் கார் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

கரூர்,

முதல்-அமைச்சரான பிறகு விஜய் இன்று முதல்முறையாக கரூர் சென்றுள்ளார். கடந்த ஆண்டு கரூர் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கினார்.

இதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சாலை வழியாக கரூர் சென்றார்.

கரூர் செல்லும் வழியில் ஆங்காங்கே தவெகவினரும், மக்களும் கூடி முதல்-அமைச்சர் விஜய்யின் கார் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

திருச்சியிலிருந்து கரூர் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆங்காங்கே காரை மெதுவாக இயக்கி, மக்களின் வரவேற்பை முதல்-அமைச்சர் ஏற்றார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் வாகன அணிக்குள் பாதுகாப்பை மீறி, தொண்டர் திடீரென்று உள்ளே நுழைந்ததால் பதற்றம் நிலவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடனடியாக தவெக தொண்டரை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர்.