தமிழக செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டு யானை... வாகனங்களை விரட்டியதால் போக்குவரத்து பாதிப்பு!

யானை துரத்தியபோது ஆபத்தை உணராத சில வாகன ஓட்டிகள் அதன் அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர்.

தாளவாடி,

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் நேற்று மதியம் கும்பாரகுண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. இதையடுத்து சாலையில் காட்டு யானை உலா வந்தது. பின்னர் அந்த வழியாக வந்த வாகனங்களை யானை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து திடீரென ஆவேசமடைந்த யானை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அங்கு நின்ற அரசு பஸ் நோக்கி யானை ஓடி வந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் உறைந்தனர். ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். யானை துரத்தியபோது ஆபத்தை உணராத சில வாகன ஓட்டிகள் அதன் அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது ஒரு பெண்ணும் யானையின் அருகே சென்று புகைப்படம் எடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.