தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணினி அறிவியல் படித்துப் பட்டம் பெற்றுள்ளதோடு அதற்கேற்ற வேலையைத் தேடி வந்துள்ளார்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகள் ஸ்ரேயா (வயது 31), கணினி அறிவியல் படித்துப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி வந்த ஸ்ரேயாவிற்கு நீண்ட நாட்களாகச் சரியான வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தகுந்த வேலை கிடைக்காததாலும், திருமணக் கவலையாலும் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரேயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.