திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று இரவு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மற்றவர்களை முந்திக்கொண்டு வந்து தனது பைக்கிற்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அந்த வாலிபரை வரிசையில் நின்று வந்து பெட்ரோல் நிரப்புமாறு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த வாலிபர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த வாலிபர் தனது பைக்கைக் கொண்டு அந்த ஊழியரை இடிப்பது போல் சென்றார். மேலும் அந்த வாலிபர், பெட்ரோல் பங்க் ஊழியரை துரத்திச் சென்று சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தால் அங்கே வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்ததோடு, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.