தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த சில நாட்களில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியைச் சேர்ந்த வாலிபர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலுக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே செண்பல்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த கருணாநிதி மகன் பழனிபாபு (வயது 25). இவர் சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூரைச் சேர்ந்த ராணி என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பை மீறி திருமணம்; வாலிபர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை

இருப்பினும் எதிர்ப்பை மீறி கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தின் எதிர்ப்பு மற்றும் சூழ்நிலையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பழனிபாபு, அந்த கிராமத்தில் உள்ள ஓடையில் அமைந்துள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முறப்பநாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிதிலிப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பழனிபாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT