தமிழக செய்திகள்

2 மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

17 வயது மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த வாலிபர் மீது மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சிவகங்கை,

2 மாணவிகளை ஒரே நேரத்தில் காதலித்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பாண்டியன்நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 2 மாணவிகள்

19 வயதான மாணவி ஒருவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியிலும், 17 வயதான மாணவி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இந்த இரு மாணவிகளின் அறிமுகமும் கிடைத்தது. மேலும் அந்த இரண்டு கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொள்கிறேன் எனவும் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

வாலிபர் போக்சோவில் கைது

இது தொடர்பாக தகவலறிந்த மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார் 17 வயது மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.