உல்லாசத்திற்கு அழைத்த 3 இளம்பெண்கள் 
தமிழக செய்திகள்

பஸ்சில் சொந்த ஊருக்கு போக அமர்ந்திருந்த வாலிபர்.. உல்லாசத்திற்கு அழைத்த 3 இளம்பெண்கள்...அடுத்து நடந்த சம்பவம்

செம குஷியான வாலிபர் சம்மதித்து ஆட்டோவில் இளம்பெண்களுடன் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள லாட்ஜிக்கு சென்றார்.

சென்னை,

தொழிலாளி ஒருவர் சென்னை கோயம்பேட்டில் பஸ்சில் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தபோது அங்கு வந்த 3 அழகிகள் அவரை உல்லாசத்திற்கு அழைத்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்

விருத்தாசலத்தை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர் சென்னை தரமணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊரில் உள்ள தோட்டத்தில் உற்பத்தியான கரும்பு கட்டுகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து தந்தையுடன் சேர்ந்து விற்பனை செய்தார். பின்னர் அவரது தந்தை வாரி மூலம் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.

உல்லாசத்திற்கு அழைத்த இளம்பெண்

தொழிலாளி போதையில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர் வாலிபரிடம் பேச்சு கொடுத்து உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளார். வாலிபர் பேச்சில் மயங்கி உள்ளார். மேலும் 2 பெண்களும் இருப்பதாக கூறி உள்ளார். அவர்களும் வாலிபரை பார்த்து அழைத்துள்ளனர். செம குஷியான தொழிலாளி சம்மதித்து ஆட்டோவில் இளம்பெண்ணுடன் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள லாட்ஜிக்கு சென்றார். ஏற்கனவே அந்த ஆட்டோவின் உள்ளே 2 இளம் பெண்கள் இருந்தனர்.

பணம் கேட்டு தகராறு

லாட்ஜிக்கு சென்றபோது இளம்பெண்ணையும் அந்த 2 பெண்களையும் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தொழிலாளி வெளியே வந்த போது இளம்பெண் அவரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

மேலும் அந்த பெண்ணுடன் வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் 2 இளம்பெண்களும் சேர்ந்து தொழிலாளி மீது பாய்ந்து அடித்து உதைத்து கல்லால் தாக்கினர். அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு இளம்பெண்களும், ஆட்டோ டிரைவரும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் தொழிலாளியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு அடிவாங்கிய சம்பவம்

அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்டு அடிவாங்கியதுடன் பணம், செல்போனை இழந்து நொந்துபோன தொழிலாளி இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் உல்லாசத்துக்கு அழைத்து தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்து தப்பியது எம்.ஜி. ஆர்.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரவீன் மற்றும் செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் 3 பேர் என்பது தெரிந்தது. இதையடுத்து பிரவீன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதேபோல் உல்லாசத்துக்கு அழைத்து மேலும் பலரிடம் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT