திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூரை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி பவ்வியலட்சுமி (வயது 20). இந்த நிலையில் வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் விரக்தியில் இருந்த பவ்வியலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார்.
இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவ்வியலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.