தமிழக செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தேனி,

உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 26), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு, 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். பின்னர் அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தீர்ப்பு

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில் விஜய்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எழில் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.