தமிழக செய்திகள்

சாராயம் விற்ற வாலிபர் கைது

குடவாசல் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குடவாசல்:

குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமல்தாஸ் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது அதில் சாராய பாட்டில்கள் இருந்தது. பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் குடவாசல் அருகே உள்ள சேங்காலிபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் கோபு (வயது30) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளில் சாராய பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.