ஈரோடு,
விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவும் முக்கிய ஆதாரமான நீர்நிலைகளை போற்றி வழிபடும் 'ஆடிப்பெருக்கு விழா', ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி 18– ம் தேதி கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்டு 3-ந்தேதி (இன்று) ஆடிப்பெருக்கு சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பவானிசாகர் அணை பூங்காவிற்கு வருகை தந்தனர். பூங்காவில் படகில் சவாரி செய்தும், சிறுவர் ரெயில் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்களில் விளையாடியும் குழந்தைகள் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் பவானிசாகர் பூங்கா களைகட்டியது.