தமிழக செய்திகள்

ஆவின் பால் விலை உயர்வா? - அமைச்சர் பதில்

கடந்த ஆட்சியில் ஒருமுறைதான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தின் இடையே பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி பேசியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பால் விற்பனை விலை உயர்வு குறித்து கோரிக்கை கொடுத்துள்ளனர். நம்முடைய முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு நன்மை செய்வதில் கண்ணும், கருத்துமாக இருக்கிறார். அதனால்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை ஆட்சிக்கு வந்த 100 நாளில் 2 முறை உயர்த்தி கொடுத்துள்ளார்.

பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காக முதல்-அமைச்சர் எடுத்த இந்த முடிவை பாராட்ட மனம் இல்லாத சில பேர் பால் விற்பனை விலையை உயர்த்துவீர்களா? என்று கேட்கிறார்கள். இது எப்படிப்பட்ட மனநிலை?. மக்கள் பால் விலை உயர்வால் சிரமப்பட வேண்டுமா?.

கடந்த ஆட்சியில் ஒருமுறைதான் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. நம்முடைய முதல்-அமைச்சர் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் துறை மற்றும் நுகர்வோர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT