திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் 2012-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட செங்குளத்தை சேர்ந்த கோமேஸ்வரன் (வயது 38) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு 13 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோமேஸ்வரனை சுத்தமல்லி காவல்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.