தமிழக செய்திகள்

6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றது செல்லும்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜி னாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடா, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எஸ்.ரவி ஆகியோர் தனித்தனியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர். தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், "6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சரியே; தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் ராஜினாமா ஏற்க தடையில்லை; ராஜினாமா ஏற்ற உத்தரவு சட்டப்படி செல்லுபடியானது என உத்தரவிட்டது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து இரண்டு மாதங்களில் முடிவெடுக்கச் சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT