தமிழக செய்திகள்

பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி தெற்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மோகனூரில் இருந்து தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பரமத்திவேலூர் சாலை அருவங்காட்டு புதூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் எதிர்பாராதவிதமாக மெபட் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த தண்டபாணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி தண்டபாணி நேற்று இறந்தார். இதுகுறித்து தண்டபாணி மகன் சதீஸ் மோகனூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.