தமிழக செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: தவெக நிர்வாகி உட்பட 2 பேர் உயிரிழப்பு

விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை முந்தி செல்ல முயன்ற சரக்கு வாகனம் சாலையோரமாக சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனம் மீது மோதியது. பின்னர் அந்த வாகனம் விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தவெக நிர்வாகி குகன் மற்றும் அஜித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பைக்கில் சென்றவர் படுகாயமடைந்தார் அவர் அருகிலுள்ள கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT