தமிழக செய்திகள்

செங்கல்பட்டு அருகே கார் டயர் வெடித்து விபத்து: 3 கல்லூரி மாணவர்கள் பலி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது.

சென்னை,

சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று கார் மூலம் புதுச்சேரி சென்றனர். அதன் பின்னர் மீண்டும் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது.

இதனால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிகெட்டு ஓடி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.