தமிழக செய்திகள்

திறனாய்வு தேர்வில் மாணவர்கள் சாதனை

திறனாய்வு தேர்வில் தென்காசி ஒண்டர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுடெல்லி அறிவியல் ஒலிம்பியாட் தேர்வு இயக்கம் ஆண்டுதோறும் தேசிய அளவில் பள்ளி மாணவ - மாணவியருக்கு திறனாய்வு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தென்காசி- அம்பை சாலையில் உள்ள திரவியநகர் ஒண்டர் பள்ளி மாணவ- மாணவிகள் மாநில அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த தேர்வில் 2-ம் வகுப்பு மாணவி மித்து ஜெய்ஷா மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், மண்டல அளவில் தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.1000 பரிசாக பெற்றார். மேலும் 7-ம் வகுப்பு மாணவி வின்சிகா மாநில அளவில் 7-ம் இடத்தை பெற்று தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.500-ம், 5-ம் வகுப்பு மாணவன் தோரன் பாலா, 3-ம் வகுப்பு மாணவன் ஹரிராம் ஆகியோர் 24-வது இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் செயலாளர் செல்வராஜ், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.