தமிழக செய்திகள்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகர் சாமி தரிசனம்

தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னை,

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என். ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பொறுப்பு கவர்னராக பதவியேற்றுள்ள ராஜேந்திர அர்லேகர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். கவர்னர் வருகையையொட்டி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.