சென்னை,
போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை. இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வாலின் உத்தரவின் படி, தமிழ்நாடு காவல்துறை மாநிலம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வரும் "சமரசம் இல்லா" (Zero Tolerance) கொள்கையை செயல்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநகர காவல் ஆணையர்களும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், குற்றம் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள். சோதனை நடவடிக்கைகள். கண்காணிப்பு மற்றும் நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையிலான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு. போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத தயாரிப்பு. விற்பனை. பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 12 வரை நடைபெற்ற இந்த தீவிர சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது. தமிழ்நாடு காவல் துறை 978 போதைப்பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை பதிவு செய்து, 1.216 நபர்களை கைது செய்துள்ளது. மேலும், 971 கிலோ கஞ்சா. 4.5 கிலோ பிற போதைப்பொருட்கள் மற்றும் 2,907 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக 1,343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. 14.955 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 162 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ. 37 லட்சம் மேற்கண்ட அனைத்து வழக்குகளும் போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்கள் தடுப்புச் சட்டம், 1985 , சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம், 2003 மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தீவிர சிறப்பு சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய குற்றங்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாநிலங்களுக்கு இடையே போதைப்பொருள் கடத்திய கும்பல் கோயம்புத்தூரில் கைது. கோயம்புத்தூர் மாநகர காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) பிரிவு, ஆந்திர பிரதேசத்தின் இச்சாபுரம் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருள் கடத்திய மாநிலங்களுக்கு இடையே செயல்படும் கும்பலின் செயல்பாட்டை முறியடித்தது.
முதற்கட்டமாக 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கும்பலின் முக்கிய நபர். ஷெல்டன் (த/பெ ஜான்சன்) கைது செய்யப்பட்டு. அவரிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், கூட்டாளிகளான மணிகண்டன் (28) மற்றும் வீரச்சின்னமருது (28) ஆகியோர் கைது செய்யப்பட்டு, மேலும் 21 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 44.1 கிலோ உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த மெத்தாம்பெட்டமின் தடுத்து நிறுத்தப்பட்டது: துல்லியமான நுண்ணறிவு தகவலின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல் துறையினர். மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த உயர்மதிப்புள்ள 3.100 கிலோ மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) போதைப்பொருளை பறிமுதல் செய்து. கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறை. போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்த சட்ட அமலாக்கத்தையும் உறுதியுடன் மேற்கொண்டு வருகிறது.
போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் சட்டவிரோத தயாரிப்பு. விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பான தகவல்கள் ஏதேனும் பொதுமக்களுக்கு தெரிந்தால், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு(Drug Free TN) மொபைல் செயலி அல்லது கட்டணமில்லா உதவி எண்: 10581 அல்லது வாட்ஸ்அப் எண்: 94984 10581 ஆகியவற்றின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.