சென்னை,
மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரிக்கு தமிழ்நாடு ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது;
”தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள், அவர்கள் பயன்படுத்திய மூன்று மீன்பிடி விசைப்படகுகளுடன், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி தலையிட்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மாலத்தீவு அரசுடன் தூதரகத்தின் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக மீட்பதற்கும், மீனவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி, இவ்விவகாரத்தில் தலையிட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்திற்கும் மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும்.”
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.