தமிழக செய்திகள்

போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்சோ குற்றவாளி

தூத்துக்குடி தாளமுத்துநகர் வெல்கம்நகர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் ராஜ் (வயது 50). இவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவின்பேரில், மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதறகான உத்தரவு நகலை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி மூலம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT